தேடல்
இருண்டு கிடக்கும்
பனிப் பிரதேசங்கள்,
சருகுகள் சரசரக்கும்
நெடுமரங்கள் இடை பாதை,
புவியீர்ப்பு விசை
பொய்த்துப் போகும் உயரங்கள்,
குளிர் போர்வையால் தழுவும்
ஆழ்கடல் பிரதேசங்கள்,
வெய்யிலின் வெம்மையில்
வாய் பிளந்த வறண்ட பூமி
என
கல்லூரி காலங்கள்,
வீணில் பொழுதுகள்,
கோடை காலங்கள்,
குளிர் காலங்கள்,
இதுபோல் இன்னும்
பற்பல காலங்களில்,
பற்பல நேரங்களில்,
தேடி தேடி,
உணர்வுகள் உலர்ந்து,
நினைவுகள் கடந்து,
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
எனக்கான உன்னை.
xavi சொன்னது,
ஆகஸ்ட் 29, 2006 இல் 9:28 மு.பகல்
வருக .. வருக.. தங்கள் வருகை நல்வரவாகுக. தேன் கூடு பகுதியில் தங்கள் பக்கத்தை இணையுங்கள். அதிகம் நண்பர்கள் படிக்க அது வசதியாக இருக்கும்.