நீ

ஆகஸ்ட் 31, 2006 at 12:53 பிற்பகல் (நீ)

சில நேரங்களில்
கருப்பு வெள்ளை படங்களின்
கவர்ச்சி
கலர் படங்களில் இருப்பதில்லை
உதிரும் சருகின்
அமைதி
உருவாகும் பச்சையத்தில்
நிலைப்பதில்லை
தண்ணீர் தரும் திருப்தி
வேறு எதுவும்
தந்ததில்லை
பேசுவதற்காய் வார்த்தைகள்
இருந்தும்
என்னிடம் இருக்கும் இந்த
மௌனத்தை போல..

0o0o0o

1 மறுமொழி

  1. சேவியர் சொன்னது,

    //
    தண்ணீர் தரும் திருப்தி
    வேறு எதுவும்
    தந்ததில்லை
    //

    சிறுநீரகம் செயலிழந்ததால் மரணத்துக்குள் தள்ளப்பட்ட என் தந்தை தன்னுடைய இறுதி நாட்களில், ஒரு நாளைக்கு அரை டம்ளர் தண்ணீர் என்னும் அளவில் வாழ்ந்தபோது ஒருமுறை சொன்னார்… உலகிலேயே சுவையான பொருள் என்ன என்று யாரும் தேடாதீர்கள். அது தண்ணீர் தான் என்று. உங்கள் கவிதை அந்த நினைவுகளைக் கிளறிவிட்டன.

    ஒரு கவிதைக்கு இப்படிப் பட்ட மிரட்டும் படம் தேவையா ? யோசியுங்கள் கவிஞரே… எனக்கு உதடு வலிக்கிறது.

மறுமொழியொன்றை வழங்குக