ரோஜா

ஆகஸ்ட் 31, 2006 at 1:08 பிற்பகல் (ரோஜா)

 

காதல் அச்சாரங்களாம் இந்த
காம்பில் தவம் செய்யும் ரோஜாக்கள்,
முட்களின் பாதுகாப்பில்
சிறையிருக்கும் ராணிகள்.

பருவம் அடைந்ததும்
பறிக்கப் பெறும் அப்பாவிகள்
பேதையில் துவங்கி பேரிளம்பெண் மட்டும்,
கொண்டை  பூட்டில்
சொருகப் பெறும் சாவிகள்.

கல்யாணப் மாலைகளில்
மணம் வீசும் மெல்லினங்கள்,
எரிந்து போகும் சவங்களுக்காய்
இறந்து போகும் உடன்கட்டைகள்.

3 மறுமொழிகள்

  1. ரோஜா ரசிகன் சொன்னது,

    ஐயா, மக்கள் இம்மாதிரிக் கவிதைகளை எழுதுவதை எப்போதோ நிறுத்தியாயிற்று. இவை கவிதைகள் அல்ல என நல்ல கவிஞர்கள் நிரூபித்துவிட்டார்கள். எதற்கு செத்த பாம்பை அடிக்கிறீர்கள்? நீங்கள் வாரமலர் தவிர வேறு எதிலும் கவிதைகளை படிப்பதில்லையா?

  2. சேவியர் சொன்னது,

    புதுமையாய் எதுவும் இந்த கவிதையில் இல்லை என்பதால், ரோஜா ரசிகனின் கவிதையை வழி மொழிகிறேன்….

    ( எவை கவிதைகள் என்பதிலும், யார் நல்ல கவிஞர்கள் என்பதிலும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பதில் இருப்பது வேறு விஷயம். )

  3. சேவியர் சொன்னது,

    புதுமையாய் எதுவும் இந்த கவிதையில் இல்லை என்பதால், ரோஜா ரசிகனின் கருத்தை வழி மொழிகிறேன்….

    ( எவை கவிதைகள் என்பதிலும், யார் நல்ல கவிஞர்கள் என்பதிலும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பதில் இருப்பது வேறு விஷயம். )

மறுமொழியொன்றை வழங்குக